இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்திற்கு இசையமைப்பாரா ஏஆர் ரஹ்மான்?

25 பங்குனி 2024 திங்கள் 08:07 | பார்வைகள் : 7413
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் படமான 'இளையராஜா' படம் கடந்த வாரம் ஆரம்பமானது. அப்படத்தின் முதல் பார்வையையும் அன்று வெளியிட்டார்கள். அதில் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.
தன்னுடைய பயோபிக் படத்திற்கு இளையராஜாவே இசையமைப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், தானே இசையமைப்பது சரியில்லை என இளையராஜா மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால், இப்படத்திற்கு இசையமைக்க ஏஆர் ரஹ்மானிடம் இது பற்றி பேசி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆரம்ப கட்டப் பேச்சு வார்த்தையில் ஏஆர் ரஹ்மான் தயக்கம் காட்டியுள்ளாராம். இருந்தாலும் அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் ஒரு ஜாம்பவானின் பயோபிக் படத்திற்கு மற்றொரு ஜாம்பவான் இசையமைத்தால் அது சிறப்புமிக்கதாக இருக்கும்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1