லிபியாவில் புலம்பெயர் மக்களின் சடலங்கள் மீட்பு
25 பங்குனி 2024 திங்கள் 08:36 | பார்வைகள் : 8259
தென் மேற்கு லிபியாவின் பாலைவனப்பகுதியில் ஒரே குழியினுள் அடக்கம் செய்யப்பட்ட 65 புலம்பெயர் மக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்வு நிறுவனம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
அவர்களின் இறப்புக்கான காரணம் மற்றும் அவர்கள் எந்த நாட்டினர் என்பது தொடர்பான தரவுகள் எதுவும் இல்லை .
ஆனால் அவர்கள் பாலைவனத்தின் வழியாக மத்திய தரைக்கடலை நோக்கி கடத்தப்பட்ட நிலையில் இறந்ததிருக்கலாம் என்றே நம்புவதாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு IOM தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுகையில், ஒரே கல்லறையில் 65 உடல்களை அடக்கம் செய்துள்ள சம்பவம் உண்மையில் அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து லிபியா அரசாங்கம் விசாரணை முன்னெடுத்துள்ளது இந்த புதைகுழியானது லிபியா திரிபோலிக்கு தெற்கே உள்ள அல்-ஷுவைர்ஃப் நகரில் உள்ள அல்-ஜஹ்ரியா பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
புலம்பெயர் மக்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ குடியேற்ற விதிகளுக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அவசியத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக IOM அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயலும் புலம்பெயர் மக்களுக்கு இலகுவான இடங்களில் ஒன்றாக லிபியா உள்ளது.
தற்போது மீட்கப்பட்ட உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்க போதுமான தரவுகளை சேகரிக்க இருப்பதாக IOM அமைப்பு தெரிவித்துள்ளது.
லிபியாவில் இருந்து புறப்பட்ட சிறு படகு ஒன்று விபத்தில் சிக்கி, 60 புலம்பெயர் மக்கள் மரணமடைந்ததாக வெளியான தகவலை அடுத்தே, தற்போது பாலைவனத்தில் 65 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan