Paristamil Navigation Paristamil advert login

பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட புயல் - 10 பேர் பலி

பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட புயல் - 10 பேர் பலி

25 பங்குனி 2024 திங்கள் 08:48 | பார்வைகள் : 5774


பிரேசில் நாட்டின் தென்கிழக்கு  கடுமையான புயல் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புயல் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பிரேசிலில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதிகபட்சமாக 62 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

இந்த வெப்ப அலையைத் தொடர்ந்து திடீரென புயல் தாக்கியிருக்கிறது. 

காலநிலை மாற்றத்தால் இந்த வானிலை மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்