Paristamil Navigation Paristamil advert login

தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா?

 தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா?

25 பங்குனி 2024 திங்கள் 09:29 | பார்வைகள் : 6419


தனுஷ் உடனான பிரிவுக்கு பின்னர் மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் என்கிற படத்தை இயக்க கமிட் ஆனார். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் திரைக்கு வந்த லால் சலாம் திரைப்படம் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் பாக்ஸ் ஆபீஸிஸ் வெறும் ரூ.20 கோடியை மட்டுமே வசூலித்து படுதோல்வியை சந்தித்தது. 

இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா மீண்டும் இணைய உள்ளதாக சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ள அவர், ஆந்திராவில் உள்ள ஓட்டலில் வைத்து தான் தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து முடிவை எடுத்திருக்கிறார்கள். மகளின் இந்த எதிர்பாரா முடிவு ரஜினி மற்றும் அவரது மனைவி லதாவுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயல்கிறார்கள். தங்களுடைய மகன்களுக்காக மீண்டும் இணைய தனுஷும் ஐஸ்வர்யாவும் முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். விரைவில் இருவரும் இணைய வாய்ப்புள்ளது”  என பயில்வான் கூறி உள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்