Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கடவுசீட்டு பெற குவியும் விண்ணப்பங்கள் - மக்கள் முக்கிய தகவல்

இலங்கையில் கடவுசீட்டு பெற குவியும் விண்ணப்பங்கள் - மக்கள் முக்கிய தகவல்

11 ஆவணி 2023 வெள்ளி 08:17 | பார்வைகள் : 5510


குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நேற்று காலை 8.30 மணி வரை 50,330 இணையவழி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பெறப்பட்ட விண்ணப்பதாரர்களில் 41,588 பேர் சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பித்துள்ளனர் மற்றும் 26,972 விண்ணப்பங்கள் அனைத்து ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அமைப்பின் கீழ் இதுவரை 6,405 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கூறியவர்களிடமிருந்து 14,676 விண்ணப்பங்கள் குறைபாடுள்ள ஆவணங்களுடன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றை அனைத்து நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களுடன் மீண்டும் அனுப்புமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மூன்று நாள் சேவையின் கீழ் 8,742 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன், பெறப்பட்ட விண்ணப்பங்களில் 6,521 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இதுவரை 6,405 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் போது, ​​தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, ஒன்லைன் முறைமையின் ஊடாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து தொடர்புடைய ஆவணங்களுடனும் சமர்ப்பிக்குமாறு குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் விண்ணப்பதாரர்களைக் கோரியுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்