Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு மக்களை வெளியேற்ற சிறப்பு விமானங்களை அனுப்பும் பிரான்ஸ்!

பிரெஞ்சு மக்களை வெளியேற்ற சிறப்பு விமானங்களை அனுப்பும் பிரான்ஸ்!

25 பங்குனி 2024 திங்கள் 13:00 | பார்வைகள் : 5781


கரீபியன் கடலில் ஓட்டிக்கொண்டுள்ள வட அமெரிக்க நாடான ஹைட்டிக்கு (Haïti) பிரான்ஸ் சிறப்பு விமானங்களை அனுப்ப உள்ளது.

ஹைட்டியில் கடந்த இரு மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் பதிவாகிவருகின்றன. ஆயுதமேந்திய குழுக்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளுவதும், தாக்குதல் நடத்துவம் என அண்மைய நாட்களில் ஹைட்டி அமைதி இழந்த நாடாக மாறியுள்ளது. அங்கு 1,100 பிரெஞ்சு மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விரும்பினால் அங்கிருந்து வெளியேற சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அங்கு இயங்கி வரும் பிரெஞ்சு தூதரகம் +509 29 99 90 90 எனும் தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளது. அதில் தொடபுகொண்டு தங்களது கோரிக்கைகளை பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்டியில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்தில் மட்டும் 2,500 பேர் கொல்லப்பட்டதாக அறிய முடிகிறது. அந்நாட்டு பிரதமர் தனது பதவியினை துறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்