1550 கிலோ எடையுள்ள வாகனத்தை தாடியால் இழுத்து உலக சாதனை படைத்த 60 வயது முதியவர்

25 பங்குனி 2024 திங்கள் 11:03 | பார்வைகள் : 6652
இலங்கையின் தலைநகரான கொழும்புவில் தனது தாடியில் உள்ள முடியால் பட்டா ரக வாகனத்தை ஒரு முதியவர் இழுத்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணம் தென்மராட்சியை சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் என்வரை இவ்வாறு செய்துள்ளார்.
இந்த நிகழ்வானது நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பட்டாட்டில் நடைபெற்றுள்ளது.
1000 மீற்றர் தூரத்திற்கு வாகனத்தை தனது தாடியாலும், தலைமுடியாலும் இழுத்து உலக சாதனை படைப்பதே இவருடைய நோக்கமாக இருந்துள்ளது.
எனவே 1550 கிலோ கிராம் எடையுடைய பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரத்துக்கு தாடியாலும், 500 மீற்றர் தூரம் வரை தலைமுடியாலும் இழுத்து சாதனை படைத்துள்ளார்.
இதை சோழன் உலக சாதனை புத்தக (Cholan Book of World Record) நிறுவனத்தின் பிரதிநிதிகள் அவதானித்து சாதனையை அங்கீகரித்து விருதையும் வழங்கியுள்ளனர்.