உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - வாக்குமூலம் அளித்துள்ள மைத்திரி
25 பங்குனி 2024 திங்கள் 12:02 | பார்வைகள் : 2750
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை உண்மையாக செய்தவர்கள் யார் என்பது தொடர்பில் தனக்குத் தெரியும் எனவும் , இது தொடர்பில் தமக்கு 2 வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமைய இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றம் ஒன்றில் தாம் இரகசிய வாக்குமூலம் வழங்க தயாராகவுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, CID யினர் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை முற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
குறித்த கருத்துகள் தொடர்பான வீடியோவையும் CID யினர் பெற்றுள்ளதோடு, அதனை நீதிமன்றிற்கும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.