100 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் அபூர்வ சந்திர கிரகணம்
25 பங்குனி 2024 திங்கள் 15:23 | பார்வைகள் : 1441
100 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அபூர்வ சந்திர கிரகணம் இன்று வானில் தோன்றவுள்ளது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஹோலி பண்டிகையோடு வருவது மட்டுமல்லாமல் பங்குனி உத்திரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் வருவதால் இந்த சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சூரியன், சந்திரன் மற்றும் பூமியும் ஒரே நேர் கோட்டில் வரும் போதும் கிரகணம் ஏற்படுகிறது.
அந்தவகையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சூரியனின் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் நேரத்தில் இந்த சந்திர கிரகணமானது ஏற்படுகிறது.
தென்படவுள்ள இந்த அபூர்வ சந்திர கிரகணமானது காலை 10:23 மணிக்குத் தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடிந்தது.