Paristamil Navigation Paristamil advert login

யாழில் பெண் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் பெண் ஒருவர் அதிரடியாக கைது

25 பங்குனி 2024 திங்கள் 16:44 | பார்வைகள் : 10390


பருத்தித்துறை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்த பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதானவர் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என்பதுடன் இவரிடமிருந்து 118 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும்  சட்டவிரோத  சிகரெடுகளும்  மேலதிக விசாரணைகளுக்காக  பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்