Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தை வெறுக்காத, தமிழர்களை மதிக்கக்கூடியவர் பிரதமராக வரவேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தை வெறுக்காத, தமிழர்களை மதிக்கக்கூடியவர் பிரதமராக வரவேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

26 பங்குனி 2024 செவ்வாய் 02:01 | பார்வைகள் : 1810


இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை நாங்குநேரியில் தேர்தல் பரப்புரை ஆற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-

தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு பிரதமர் மோடி நிதி உதவி வழங்கவில்லை. இரண்டு இயற்கை பேரிடர்கள் வந்த போதும் தமிழகத்திற்கு ஒரு காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்.  

நிதி கேட்டும் நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டால், பிச்சை என்று மத்திய நிதி மந்திரி ஆணவத்துடன் ஏளனம் செய்கிறார். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறும். தமிழகத்தை வெறுக்காத, தமிழர்களை மதிக்கக்கூடியவர் மத்தியில் பிரதமராக வரவேண்டும்.   

பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் என்பதை விளக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது அவமானம் என்று வாக்காளர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் பல திட்டங்களை தி.மு.க அரசு நிறைவேற்றி இருக்கிறது.  

தமிழ்நாட்டு மக்களை பிரதமர் மோடி வஞ்சிக்கிறார். பிரதமர் மோடி வடிக்கும் கண்ணீரை அவரது கண்களே நம்பாது.  

இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்