Paristamil Navigation Paristamil advert login

ஊழலை ஒழிக்க கட்சி துவக்கிய கமல் தி.மு.க.,வில் தஞ்சம்: எச்.ராஜா சாடல்

ஊழலை ஒழிக்க கட்சி துவக்கிய கமல் தி.மு.க.,வில் தஞ்சம்: எச்.ராஜா சாடல்

26 பங்குனி 2024 செவ்வாய் 02:22 | பார்வைகள் : 1773


ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தான் மக்கள் நீதி மய்யத்தை துவக்கிய கமல் இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான தி.மு.க.,விடம் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் அவரது கட்சியினர் பா.ஜ.,வில் இணைகின்றனர், என, சிவகங்கையில் பா.ஜ., தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா சாடினார்.

அவர் கூறியதாவது: மோடி பிரதமராக 3 வது முறையாக வரவேண்டும் என்பது தான் நாட்டு மக்கள் விருப்பம். இம்முறை 400 தொகுதிக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். காரைக்குடி அருகே கண்டனுார் தந்தையும்(சிதம்பரம்), மகனும் (கார்த்தி) சிவகங்கை தொகுதியில் 40 ஆண்டுகளாக வெற்றி பெற்றிருந்தும், பொருளாதாரத்தில் பின்தங்கியே சிவகங்கை உள்ளது.

மக்களை புறக்கணித்தவர்கள் அவர்கள். வரும் லோக்சபா தேர்தலில் அவர்கள் குடும்பத்திடமிருந்து சிவகங்கை தொகுதியை மீட்டு, பிரதமர் மோடி நேரடி பார்வையில் கொண்டு சென்று வளர்ச்சி பெற செய்ய வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மாநில அரசு இடத்தை தேர்வு செய்வதில் சிங்கிப்பட்டியா, மதுரையா என குழப்பத்தில் இருந்ததே தாமதத்திற்கு காரணம்.

அமைச்சர் உதயநிதி காட்டிய செங்கலுக்கு வேலையின்றி எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கி விட்டது. சனாதன தர்மம் என்றால் அது ஹிந்து மதம் தான் என உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது என்றார்.

பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் கூறியதாவது: சிவகங்கை தொகுதியில் ஒரு தொழிற்சாலை கூட துவக்கப்படவில்லை. இங்குள்ள 30 முதல் 50 சதவீதம் இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலம், வெளி நாடுகளுக்கு செல்கின்றனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் திட்டம் கொண்டு வருவேன். முன்பிருந்த எம்.பி.,க்களை விட 100 சதவீதம் கண்டிப்பாக சிவகங்கையில் தான் இருப்பேன் என்றார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்