€4 யூரோக்களுக்கு மெற்றோ பயணச்சீட்டு! - நியாயப்படுத்தும் Pécresse!!
26 பங்குனி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 6524
ஒலிம்பிக் போட்டிகளின் போது மெற்றோ பயணச்சிட்டை ஒன்றின் விலை €4 யூரோக்களுக்கு விற்பனையாக உள்ளமை அறிந்ததே. நேற்று மார்ச் 25 ஆம் திகதி ’கட்டண உயர்வு’ தொடர்பாக இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse இடம் வினாவப்பட்டது.
“இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது எனக்குத் தெரியும். ஒலிம்பிக் போட்டிகளின் போது சர்வதேச பயணிகளுக்கு ஏற்றது போல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அது உலகமெங்கும் வழமை தான்!” என தெரிவித்தார்.
இல் து பிரான்சுக்குள் வசிக்கும் மக்கள் இந்த கட்டண உயர்வில் இருந்து எப்படி தங்களை பாதுகாக்க முடியும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“இல் து பிரான்ஸ் மக்களுக்கு மாதாந்தம் பெறக்கூடிய பயணச்சிட்டைகள் இருக்கின்றது. 10 பயணச்சிட்டைகள் கொண்ட தொகுதி ஒன்றை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு பயணத்தையும் €1.73 யூரோக்களுக்குள் முடித்துவிட முடியும். பேருந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை. ட்ராம் சேவைகளில் மாற்றம் இல்லை அவற்றை பயன்படுத்த முடியும்.” என அவர் பதிலளித்தார்.