Paristamil Navigation Paristamil advert login

சுற்றுலாப்பயணிகள் வருகை வீழ்ச்சி!

சுற்றுலாப்பயணிகள் வருகை வீழ்ச்சி!

26 பங்குனி 2024 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 6632


இவ்வருடத்தின் முதலிரண்டு மாதங்களிலும் பரிசுக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

இவ்வருடத்தின் ஜனவரி மற்றும் பெப்ரவரியில் தலைநகர் பரிசுக்கு 5.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருந்தனர். சென்ற 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையானது 2.7% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, ஐரோப்பா முழுவதும் சுற்றுலாத்துறை இந்த இரண்டு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருடத்தில், ஒலிம்பிக் போட்டிகள், La Défense Arena பகுதியில் பாடகி Taylor Swift இன் இசைநிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருப்பதால் அடுத்ததடுத்த மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்