வெடிகுண்டு அச்சுறுத்தல், ‘சைஃபர்’ தாக்குதல்.. - பாடசாலைகளில் பதட்ட நிலை!
26 பங்குனி 2024 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 4796
பிரான்சில் உள்ள 130 வரையான பாடசாலைகளுக்கு கடந்த வாரத்தில் இணையவழி ‘சைஃபர்’ தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் அண்மைய நாட்களில் இதுபோன்றை சைஃபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இம்மாத ஆரம்பத்தில் ‘பிரான்ஸ் திறவாய்’ இணையத்தளத்திலும், காப்புறுதி நிறுவங்களிலும் மேலும் பல அரச நிறுவனத்தின் இணையத்தளங்களிலும் சைஃபர் தாக்குதல்கள் பதிவான நிலையில், தற்போது பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நடுத்தர மற்றும் உயர்கல்வி பாடசாலைகள் என மொத்தம் 130 இடங்களில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவற்றில் பெரும்பான்மையானது இல் து பிரான்சைச் சேர்ந்த பாடசாலைகளாகும்.
அதேவேளை, வெடிகுண்டு தாக்குதல்களும் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளன. நேற்று திங்கட்கிழமை Haut-Rhin மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தன.