Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த  ISIS  தீவிரவாத அமைப்பு

ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த  ISIS  தீவிரவாத அமைப்பு

26 பங்குனி 2024 செவ்வாய் 05:35 | பார்வைகள் : 3465


ISIS  தீவிரவாத அமைப்பு ரஷ்யாவில் பாரிய பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது.

மாஸ்கோ தாக்குதல் தொடர்பில் கைதானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது, தங்கள் சகோதாரர்களின் கோபத்தை அதிகரித்துள்ளது என ISIS எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர்கள் கடுமையான காயங்களுடன் ரஷ்ய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

மேலும் அவர்கள் ரஷ்ய ராணுவ வீரர்களால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ISIS எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பு, ''இஸ்லாமிய கைதிகளை சித்திரவதை செய்வதை நிறுத்துங்கள். 

அவர்கள் கொடுமைப்படுத்தப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள், அவர்களின் ஆயிரக்கணக்கான சகோதரர்களுக்கு இரத்த வெறியை அதிகப்படுத்துகிறது.

அனைத்து காட்டுமிராண்டி ரஷ்யர்களுக்கும்! இஸ்லாமிய கைதிகளை சித்திரவதை செய்வதை நிறுத்துங்கள்.

ஜாக்கிரத்தை! பிடிபட்ட எங்கள் சகோதரர்களுக்காக உங்களைப் பழிவாங்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று எண்ண வேண்டாம்'' என அச்சுறுத்தியுள்ளது.       

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்