Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பாதுகாப்பு தீவிரம்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பாதுகாப்பு தீவிரம்

26 பங்குனி 2024 செவ்வாய் 05:45 | பார்வைகள் : 7139


புனித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும்  உயிர்த்த ஞாயிறு தினமான 31 ஆம் திகதியும்  நாட்டிலுள்ள  அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடி நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்துப் பொலிஸ் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, சமூக பொலிஸ் குழுக்கள், அந்தந்த தேவாலயங்களின் பாதிரிமார்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு  பொலிஸ் மா அதிபர் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்