Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலே அமெரிக்காவின் பாலத்தில் மோதியது - பலர் பலி?

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலே அமெரிக்காவின் பாலத்தில் மோதியது - பலர் பலி?

26 பங்குனி 2024 செவ்வாய் 09:41 | பார்வைகள் : 14704


அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பெல்ட்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பாரிய கப்பல் ஒன்று பாலத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பாலம் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளமையினால் பேரனத்தம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அப்போது பாலத்தில் சுமார் 4 வாகனங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
 
இப்போது எங்கள் கவனம் இந்த மக்களை மீட்டு மீட்கும் முயற்சியில் உள்ளதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என மீட்பு குழுவினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்