காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட பற்றுசீட்டுக்களை கோரும் மக்கள்!
26 பங்குனி 2024 செவ்வாய் 12:00 | பார்வைகள் : 5226
பிரான்சில் சென்ற 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் வணிக நிலையங்களில் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. காகித பயன்பாடுகளை குறைப்பதற்காக இந்த திட்டம் அரசு முன்னெடுத்திருந்தது. இந்நிலையில், காகித பற்றுச்சீட்டுக்கள் கட்டாயம் தேவை என தொடர்ந்தும் பல இலட்சம் மக்கள் கோரி வருகின்றனர்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டில் ஒருவருக்கும் அதிகமானோர் காகித பற்றுச்சீட்டினை கோருவதாக தெரியவந்துள்ளது.
கிட்டத்தட்ட 55% சதவீதமான மக்கள் பற்றுச்சீட்டினை கோருகின்றார்கள்.
ஆண்டுக்கு 30 பில்லியன் பற்றுச்சீட்டுக்கள் பிரான்சில் அச்சடிக்கப்பட்ட நிலையில், அவை அனைத்தும் மின்னனு முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனாலும் அவை திருப்திகரமாக இல்லை எனவும், பொருட்களின் விலைகளை பரிசோதிக்க காகித பற்றுச்சீட்டுக்களே ஏதுவாக இருக்கிறது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டு இறுதியில் 66% சதவீதமான மக்கள் காகித பற்றுச்சீட்டு கோரியிருந்த நிலையில்,. தற்போது அது 55% சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வாறாயினும் அதன் தேவை தொடர்ந்தும் இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.