’பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான்!’ - ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்!
26 பங்குனி 2024 செவ்வாய் 13:00 | பார்வைகள் : 10583
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
”பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான். எங்களால் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். எங்களால் நிச்சயம் அவற்றை தடுக்க முடியும் என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என ஜனாதிபதி இன்று மார்ச் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டார்.
மொஸ்கோவில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து, பிரான்சில் தீவிர விழிப்புநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் ஆண்டாண்டுகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த Vigipirate திட்டத்தினை மீண்டும் கொண்டுவந்துள்ளது. இந்த திட்டமானது பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.
அதேவேளை, பிரான்சில் இவ்வாண்டில் மட்டும் இரண்டு பயங்கரவாத தாக்குதல்கள் முறியபடிக்கப்பட்டுள்ளதாக நேற்று திங்கட்கிழமை பிரதமர் கேப்ரியல் அத்தால் குறிப்பிட்டிருந்தார்.


























Bons Plans
Annuaire
Scan