துருக்கி நாட்டில் பாரிய நிலநடுக்கம்!
11 ஆவணி 2023 வெள்ளி 09:35 | பார்வைகள் : 6276
துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் மையம் இந் நிலநடுக்கம் 5.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மாலட்யா மாகாணத்தின் யெசில்யர்ட் பகுதி மற்றும் அடியமன் மாகாணம் ஆகியவை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
நிலநடுக்கத்தில் சிக்கி 23 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி மாதம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது 50,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்.