‛தக் லைப்' படத்தில் சிம்பு
26 பங்குனி 2024 செவ்வாய் 15:37 | பார்வைகள் : 11828
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைப் படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க இருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக வெளியேறிய நிலையில், தற்போது அதே காரணத்தை சொல்லி ஜெயம் ரவியும் வெளியேறியுள்ளார்.
துல்கர் சல்மான் நடிக்க இருந்த வேடத்தில் நடிப்பதற்கு சிம்புவிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தவர்கள் தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளார்களாம். இதனால் தக் லைப் படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு நடிப்பது உறுதியாகி உள்ளது.
ஏற்கனவே கமலின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் 48வது படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தக் லைப் படத்தில் நடித்து முடித்த பிறகுதான் அந்த படத்தில் சிம்பு நடிக்க தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயம் ரவி நடிக்க இருந்த வேடத்தில் நடிக்கவும் வேறு சில நடிகர்களிடத்தில் தக்லைப் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan