Seine-et-Marne : குழந்தையை மோதி தள்ளிய வாகனம்! - உயிராபத்து!
26 பங்குனி 2024 செவ்வாய் 18:19 | பார்வைகள் : 18605
ஒன்றரை வயது குழந்தை ஒன்றை வாகனம் ஒன்று மோதித்தள்ளியதில் குழந்தை படுகாயமடைந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று மார்ச் 25 ஆம் திகதி திங்கட்கிழமை Meaux (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. தள்ளுவண்டியில் (stroller) அமர்ந்திருந்த குழந்தையை தள்ளிக்கொண்டு அவரது தயார் வீதியை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது வீதியில் பயணித்த வாகனம் ஒன்று அவர்களை இடித்து தள்ளியது.
குழந்தை தள்ளுவண்டியுடன் சேர்த்து தூக்கி வீசப்பட்டது. இதில் குழந்தை படுகாயமடைந்துள்ளது.
குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு பரிசில் உள்ள Necker மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குழந்தை உயிராபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டு பிறந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

























Bons Plans
Annuaire
Scan