517 கிலோ கஞ்சாவுடன் பயணித்த மகிழுந்து! - தந்தையும் மகனும் கைது!
26 பங்குனி 2024 செவ்வாய் 18:38 | பார்வைகள் : 10706
மார்ச் 21 ஆம் திகதி வியாழக்கிழமை Vierzon (Cher) நகரில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பாரிய அளவு போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
A20 நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வேகமாக பயணித்த மூன்று மகிழுந்துகளை தடுத்து நிறுத்தினர். அவற்றினை சோதனையிட்டபோது, மகிழுந்து ஒன்றில் 517 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டது.
மூவர், மூன்று மகிழுந்துகளில் பயணித்துள்ளனர். அவர்களில் இருவர் தந்தை-மகன் எனவும் அவர்கள் Essonne மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது..


























Bons Plans
Annuaire
Scan