Paristamil Navigation Paristamil advert login

கஞ்சா பயன்படுத்த அனுமதியளித்துள்ள பிரபல ஐரோப்பிய நாடு

கஞ்சா பயன்படுத்த அனுமதியளித்துள்ள பிரபல ஐரோப்பிய நாடு

24 மாசி 2024 சனி 09:00 | பார்வைகள் : 2528


ஜெர்மனி நாடாளுமன்றம், கஞ்சா பயன்பாட்டைச் சட்டபூர்வமாக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மால்டா, லக்ஸம்பெர்க் நாடுகளுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனில் கஞ்சா பயன்பாட்டைச் சட்டபூர்வமாக்கவுள்ள மூன்றாவது நாடு ஜெர்மனி.

ஜெர்மனியில் தனிநபர் பொதுவெளியில் 25 கிராம் அளவுக்கும் வீட்டில் 50 கிராம் அளவுக்கும் கஞ்சாவை வைத்துக் கொள்ளவும் வீடுகளில் மூன்று செடிகள் வரை வளர்க்கவும் அனுமதிக்கப்படவுள்ளது.

கார்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜெர்மனிய சுகாதார துறை அமைச்சர் கார்ல் லாட்டர்பாக், இந்த சட்டம் 70 லட்சம் ஜெர்மானியர்கள் தொடர்ச்சியாக எடுத்து கொள்ளும் கஞ்சாவை வெளிப்படையான சந்தைக்கு கொண்டுவரும் எனத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மருத்துவ காரணங்களுக்காகவும் மேம்பட்ட தரத்தில் கஞ்சா சந்தைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கஞ்சா பயன்பாட்டுக்குத் தடை நிலவும்.

18 முதல் 21 வயதிற்குள் உள்ளவர்கள் அதிகபட்சம் 30 கிராம் அளவில் மட்டுமே கஞ்சாவை வாங்க இயலும்.

ஏப்ரல் 1 முதல் கஞ்சாவை வைத்துக் கொள்ளவும் வளர்க்கவும் அனுமதி அமுலாகவுள்ளது.

மூன்று மாதங்களுக்கு பிறகு உரிமம் பெற்ற லாப நோக்கமற்ற அமைப்புகள் மூலம் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு பகிர அனுமதிக்கப்படும்.

ஜெர்மனியின் 16 மாநிலங்களில் சட்ட பொறுப்பில் உள்ள எதிர்க்கட்சி மற்றும் மருத்துவர்கள் குழு அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய கோரி வருகின்றன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்