உக்ரைன் தாக்குதலில் சிதறிய ரஷ்ய A-50 உளவு விமானம்...!

24 மாசி 2024 சனி 09:18 | பார்வைகள் : 7066
ரஷ்யாவின் மிக முக்கியமான A-50 உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் அறிவித்தது.
உக்ரைன் போர்(ukraine war) 3வது ஆண்டில் நுழைந்து இருக்கும் நிலையில், இந்த போர் நடவடிக்கையில் இரு தரப்பினரும் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளனர்.
ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
மேற்கு நாடுகளும் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதி உதவி அளித்து வருகின்றன.
போரின் விளைவுகள் உலகளவில் உணரப்படுகின்றன.
குறிப்பாக எரிபொருள் மற்றும் உணவு விலைகள் உயர்ந்து மக்களை வெகுவாக சிரமப்படுத்துகின்றன.
உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் மிக முக்கியமான A-50 உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் அறிவித்தது.
கடந்த சில வாரங்களில் இரண்டாவது A-50 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவமாகும்.
போரின் முன்வரிசையில் இருந்து 200km (124 miles) தொலைவில் ரஷ்யாவின் Rostov-on-Don மற்றும் Krasnodar நகருக்கு இடைப்பட்ட பகுதியில் A-50 military spy plane தாக்கப்பட்டதாக உக்ரைனிய ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா(Russia) இதுவரை இந்த அறிவிப்புகளை உறுதிப்படுத்தவில்லை.
போரின் போக்கை மாற்றும் திறன் கொண்ட முக்கிய உபகரண இழப்பு என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த A-50 விமானம் ரஷ்ய ராணுவத்திற்கு உளவு தகவல்களை வழங்குவதற்கும், போர்க்களத்தில் எதிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1