அணுவாயுதத் தாக்குதல்களை எதிர்கொள்ள இலங்கை தயார்
24 மாசி 2024 சனி 12:16 | பார்வைகள் : 2527
இலங்கையில் அணுவாயுதத் தாக்குதல் ஏற்பட்டு பரவும் எந்தவொரு கதிர்வீச்சுக்கும் முகங்கொடுக்க தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய ஆற்றல் மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.
”அணுவாயுதத் தாக்குதலின் போது ஏற்படும் கதிர்வீச்சுகளை எதிர்கொள்ளும் வகையில் மனித வளங்கள் மற்றும் உபகரணங்களை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது.
இப்பகுதியில் ஒரு அணுசக்தி விபத்து நிகழ்ந்தால், எந்த கதிர்வீச்சு உமிழ்வையும் எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது.” என்றும் அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.