ஏமனில் ஹவுதிகளை மீண்டும் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, பிரித்தானியா
25 மாசி 2024 ஞாயிறு 08:58 | பார்வைகள் : 3088
செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் முன்னெடுத்துவரும் நிலையில், ஏமனில் ஹவுதிகளின் 18 இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல் தொடுத்துள்ளன.
ஏமனில் உள்ள ஹவுதிகளின் 18 இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் சனிக்கிழமை புதிய தாக்குதலை நடத்தியதாக அவர்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருவார காலமாக ஹவுதிகள் முன்னெடுத்து வந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக இது அமைந்துள்ளது. ஏமனில் 8 இடங்களில் 18 இலக்குகளை தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதல்களுக்கு அவுஸ்திரேலியா, பஹ்ரைன், டென்மார்க், கனடா, நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த மாதத்தில் இது இரண்டாவது என்றும், செங்கடலில் ஹவுதிகள் தாக்குதல் தொடங்கிய பின்னர் இது நான்காவது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நவம்பர் நடுப்பகுதியில் இருந்து வணிக மற்றும் கடற்படை கப்பல்கள் மீதான 45 தாக்குதல்களை ஹவுதிகள் முன்னெடுத்துள்ளனர்.
இது உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.