கனடாவில் இணையத் தீங்கு தடைச் சட்டம் அறிமுகம்
25 மாசி 2024 ஞாயிறு 10:52 | பார்வைகள் : 3054
கனடாவில் இணையத்தில் இடம்பெறும் தீங்குகளை தடை செய்யும் சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இணையத்தில் இடம்பெறக்கூடிய குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இணையத் தீங்குச் தடைச் சட்டம் தொடர்பிலான சட்ட மூலத்தை அறிமுகம் செய்வதற்கு நீண்ட காலம் தகவல் திரட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தை பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய தீங்குகளை தடுக்கும் நோக்கில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி போலி ஆபாச காட்சிகள் உருவாக்கி இணையத்தில் வெளியிடுதல் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான பல்வேறு இணைய குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நிகழ்நிலை தீங்கு தடைச் சட்டம் என்ற பெயரில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
லிபரல் அரசாங்கம் ஏற்கனவே இந்த சட்டத்தை அறிமுகம் செய்ய முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.