Paristamil Navigation Paristamil advert login

Xmail கொண்டு வரும் எலான் மஸ்க்.., Gmail சேவை நிறுத்தப்படுவதாக வதந்தி பரவிய நிலையில் அறிவிப்பு

Xmail கொண்டு வரும் எலான் மஸ்க்.., Gmail சேவை நிறுத்தப்படுவதாக வதந்தி பரவிய நிலையில் அறிவிப்பு

25 மாசி 2024 ஞாயிறு 11:02 | பார்வைகள் : 2984


Gmail சேவை நிறுத்தப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், Xmail என்னும் மின்னஞ்சல் சேவை விரைவில் கொண்டுவரப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

SpaceX, Tesla, Twitter உள்ளிட்ட பல பெருநிறுவனங்களின் உரிமையாளரும் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் (Elon Musk) விரைவில் Xmail சேவையை அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இவர் சமீப காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ப்ளூ டிக் விவகாரம், பணி நீக்கம் போன்ற செயல்களை முன்னெடுத்தல் போன்றவற்றால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார். அந்தவகையில், Twitter என்ற பெயரை 'எக்ஸ்' என்று மாற்றினார்.

இந்நிலையில், Xmail என்னும் மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தவிருப்பதாக Elon Musk தெரிவித்துள்ளார்.

தற்போது, Gmail சேவை நிறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் Elon Musk -ன் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ட்விட்டர் எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நாதன் மெக்ராடி என்பவர், எப்போது Xmail சேவையை அறிமுகப்படுத்தப்போகிறோம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த Elon Musk, "விரைவில் வரப்போகிறது' என்று கூறியுள்ளார்.  


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்