Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வலுவடைந்த ரூபாயின் பெறுமதி - மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை

இலங்கையில் வலுவடைந்த ரூபாயின் பெறுமதி - மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை

25 மாசி 2024 ஞாயிறு 15:12 | பார்வைகள் : 5098


இலங்கையில் ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையின் பிரதிபலனை அடுத்த மாதம் முதல் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன், மார்ச் முதல் வாரத்தில் இருந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார். 

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடியுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்