விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?
25 மாசி 2024 ஞாயிறு 16:15 | பார்வைகள் : 6979
நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமீபகாலமாக சில சிக்கல்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு அவருக்கு அஜித்குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்து பிறகு அந்த வாய்ப்பு சில காரணங்களால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு வேறொரு இயக்குனருக்கு கொடுக்கப்பட்டது. இது விக்னேஷ் சிவனை பெரிய அளவில் காயப்படுத்தியது என்று கூட கூறலாம்.
இதனால் சோகத்தில் இருந்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக LIC என்ற திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுப்பதாக அறிவித்தார். இந்த படத்தின் தலைப்புக்கு எதிராக பிரச்சனை ஒன்றும் எழுந்தது. அது என்னவென்றால், LIC என்ற டைட்டிலை இயக்குனர் SS குமரன் என்பவர் ஏற்கனவே பதிவு செய்து வைத்து இருக்கிறாராம்.
எனவே, விக்னேஷ் சிவன் அவருடைய படத்தின் தலைப்பை மாற்றவேண்டும் என்று SS குமரன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். தொடர்ச்சியாக இப்படி சிக்கலில் விக்னேஷ் சிவன் சிக்கி வருவதால் தற்போது அவருடைய மனைவி நயன்தாரா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
அது என்னவென்றால், தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை பல பிரச்சனைகள் தொடர்ந்து வருவதால் கேரளாவுக்கு அழைத்து சென்று இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட மலையாள மாந்திரிகளை வைத்து விக்னேஷ் சிவனுக்கு தோஷம் கழிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan