Paristamil Navigation Paristamil advert login

போரில் கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்கள்...  ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தகவல்

போரில் கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்கள்...  ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தகவல்

26 மாசி 2024 திங்கள் 09:23 | பார்வைகள் : 2840


ரஷ்ய- உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை தொடர்பில் முதல் முறையாக தகவல் வெளியிட்டுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர், இதுவரை 31,000 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி வெளிப்படுத்தியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் படையெடுப்பின் இரண்டாண்டு நிறைவுக்கு ஒரு நாள் கழித்து தலைநகர் கிய்வில் பேசுகையில், சமீபத்திய இராணுவ பின்னடைவுகள் இருந்தபோதிலும் உக்ரைன் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் பற்றாக்குறையாக இருப்பதை ஒப்புக்கொண்ட ஜெலென்ஸ்கி, ராணுவம் வீறு கொண்டு முன்னேறும் போது ஆயுதங்கள் முக்கியமானவை என்றார்.

போரில் காயமடைந்துள்ள வீரர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்த ஜெலென்ஸ்கி, அது ரஷ்ய ராணுவத்திற்கு உதவும் தரவாக இருக்கும் என்றார். 

ஜெலென்ஸ்கி 31,000 வீரர்கள் என வெளிப்படையாக தெரிவித்திருந்தாலும், மேற்கத்திய நாடுகள் வெளியிட்டுள்ள எண்ணிக்கை மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகள் தரப்பு குறிப்பிடுகையில், 70,000 உக்ரைன் வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும் 120,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

ஆனால், எண்ணிக்கை அல்ல, ஒவ்வொரு இறப்பும் தங்களுக்கு இழப்பு தான் என்றார் ஜெலென்ஸ்கி.

ரஷ்யா தரப்பில் 180,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, 500,000 வீரர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

நிதியுதவி தொடர்பில் அமெரிக்கா சாதகமான முடிவெடுக்கும் என்றும் நம்புவதாக குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி,

கிட்டத்தட்ட மொத்த தொகையும் அமெரிக்காவிற்குள் ஆயுத உற்பத்தியாளர்களுடன் செலவிடப்படுகிறது என்பதை அழுத்தமாக தெரிவித்துள்ளார். 

மேலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், ரஷ்ய - உக்ரைன் போரின் முடிவை மாற்றும் என்றும்,

டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்றால், நிதி அல்லது ஆயுத உதவிக்கான வாய்ப்பே இல்லை என்றும் இந்த ஆண்டு போரின் முடிவின் வடிவத்தை வரையறுக்கும் என்றும் ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்