எலிசே மாளிகைக்கு பெற்றோல் கேனுடன் வருகை தந்த நபர்!
26 மாசி 2024 திங்கள் 10:12 | பார்வைகள் : 16782
ஜனாதிபதியின் எலிசே மாளிகைக்கு பெற்றோல் கேனுடன் வருகை தந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் இலத்திரனியல் காப்பு அணிந்திருந்ததாகவும், அவர் காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் Angers (Maine-et-Loire) நகரச் சேர்ந்தவர் எனவும், பல்வேறு குற்றச்செயல்களின் ஈடுபட்டிருந்ததால், அவர் குறித்த நகரை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது எனவும், நேற்றைய தினம் தடையை மீறி பரிசுக்கு வருகை தந்துள்ளதாகவும், எலிசே மாளிகையின் வாசலுக்கு வருகை தந்த அவர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை பார்க்கவேண்டும் என கோஷமிட்டதாகவும் அறிய முடிகிறது.
Renault Mégane மகிழுந்து ஒன்றில் அவர் அங்கு வருகை தந்ததாகவும், மகிழுந்துக்குள் இருந்து பெற்றோல் கேன் ஒன்றை எடுத்ததாகவும், அதனைக் கவனித்த காவல்துறையினர் உடனடியாக செயற்பட்டு, குறித்த நபரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

























Bons Plans
Annuaire
Scan