Paristamil Navigation Paristamil advert login

ஐக்கிய அமீரகத்தில் தனிநபர் கடன் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

ஐக்கிய அமீரகத்தில் தனிநபர் கடன் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

26 மாசி 2024 திங்கள் 10:37 | பார்வைகள் : 4775


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்கிகள் வெளிநாட்டவர்களுக்கு தனிநபர் கடன் வாங்க எண்ணற்ற தெரிவுகளை வழங்கி வருகின்றன.

மாணவர்களுக்கான கடன்கள், தம்பதிகள் இணைந்து கடன் வாங்கும் வாய்ப்பு என்ப அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பல நிறுவனங்களும் கடன் அளிக்கும் தெரிவுகளை மிக எளிதாக்கியுள்ளன. தனிநபர் கடன்களை பொறுத்தமட்டில் நிலையான வருவாய் தொடர்பில் வங்கிகளுக்கு உறுதியளிக்க வேண்டும் என்பதையே தகுதியாக வைத்துள்ளனர்.

வெளிநாட்டவர்கள் தனிநபர் கடன் வாங்க தகுதி அளவுகோல்கள் மற்றும் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பான விரிவான தகவல் வெளியாகியுள்ளது. 

21 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஐக்கிய அமீரகத்தில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிகபட்ச வயது வரம்பு 60 முதல் 65 வரை என வங்கிகள் குறிப்பிடுகின்றன. சில வங்கிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற சலுகையை வழங்கி வருகிறது.

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வருவாய் என்பது 5,000 முதல் 8,000 திர்ஹாம் என இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அவர்கள் வேலையில் இருப்பதை உறுதி செய்வதுடன், 6 மாதமேனும் அந்த நிறுவனத்தில் நிலையான சம்பளத்துடன் பணியாற்றி வருவதை நிரூபிக்க வேண்டும்.

மேலும், ஏற்கனவே வங்கி கடன் வாங்கியவரா என்பதையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள், அமீரக அடையாள அட்டையின் நகல். கடவுச்சீட்டு மற்றும் விசா நகல், 3 முதல் 6 மாதங்களில் முன்னெடுத்த வங்கி நடவடிக்கைகள், சம்பள பரிமாற்ற சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கியின் தரவுகளின்படி, தனிநபர் கடன்கள் கடனாளியின் சம்பளத்தை விட 20 மடங்கு அதிகமாக இருக்கக்கூடாது. கடன் பெற்றவர்கள் 48 மாதங்களுக்குள் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்கிகள் வருடாந்திர அடிப்படையில் கடன் இருப்பைக் குறைப்பதன் அடிப்படையில் கடனுக்கான வட்டி விகிதத்தைக் கணக்கிட்டு அறிவிக்க வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்