Paristamil Navigation Paristamil advert login

சர்ச்சைக்குரிய நடுவரின் தீர்ப்பு - சனத் ஜசூரிய கடுமையான விமர்சனம்

சர்ச்சைக்குரிய நடுவரின் தீர்ப்பு - சனத் ஜசூரிய கடுமையான விமர்சனம்

26 மாசி 2024 திங்கள் 11:19 | பார்வைகள் : 1500


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் நடுவர் அளித்த முடிவை அங்கீகரிக்க முடியாது என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகரும் மூத்த துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சனத் ஜயசூரிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நடுவரின் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், போட்டி முடிந்தவுடன் வனிந்து ஹசரங்கா, "அது நோ பால் என்பதை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் நீங்கள் சர்வதேச போட்டிகளுக்கு அம்பயராக இருக்க தகுதியே இல்லை.

அவர் வேறு ஏதாவது வேலை செய்தால் சிறப்பாக இருக்கும்" என அம்பயரை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில்,  தனிப்பட்ட முறையில் நடுவரை தாக்கிப் பேசியதால் வனிந்து ஹசரங்கவுக்கு 2 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை மற்றும் கடந்த போட்டிக்கான கொடுப்பனவில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்