Thibodau முதலை வயிற்றில் இருந்த 70 நாணயங்கள்...!
26 மாசி 2024 திங்கள் 13:16 | பார்வைகள் : 1601
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் முதலையின் வயிற்றில் இருந்து 70 நாணயங்கள் மீகப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள்து.
ஹென்றி டோர்லி உயிரியல் பூங்கா மற்றும் மீன்கள் கண்காட்சி மையத்தில் வளர்ந்து வரும் உயிரினங்களுக்கு வழக்கம்போல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் ரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 36 வயதான திபோடாக்ஸ் (Thibodaux) என்ற முதலையின் வயிற்றில் உலோகம் இருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, திபோடாக்ஸ் முதலைக்கு மயக்க மருந்து கொடுத்து, வயிற்று வழியாக கேமராவின் உதவியுடன் நாணயங்கள் கண்டறியப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டது.
சுமார் 70 அமெரிக்க நாணயங்கள் முதலையின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது.
சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் உயிரியல் பூங்கா நிர்வாகம் பதிவிட்டுள்ளது. அதில் , முதலைக்குச் சிகிச்சை பார்த்த கால்நடை மருத்துவர் டாக்டர். கிறிஸ்டினா ப்ளூக் இதுகுறித்து பேசும்போது, பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் முதலை இருக்கும் தண்ணீரில் நாணயங்களைப் போடுவதனால் நாணயங்களை முதலை விழுங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.