அஜித், சூர்யா பட தயாரிப்பாளர் திடீர் கைது..
26 மாசி 2024 திங்கள் 15:02 | பார்வைகள் : 7748
அஜித், சூர்யா உட்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் நடித்த ’வான்மதி’ ’காதல் கோட்டை’ சூர்யா நடித்த ’காதலே நிம்மதி’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். இவர் அல்லு அர்ஜுனை வைத்து தயாரித்த படத்திற்கு பிரபல நிறுவனத்திடம் ரூ.1.70 கோடி கடன் பெற்றதாகவும் அந்த கடனை அவர் திருப்பி தரவில்லை என்று புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அவர் ஆஜராகவில்லை என்பதால் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரை உலகில் பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்ட உள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


























Bons Plans
Annuaire
Scan