Paristamil Navigation Paristamil advert login

பிரான்சுக்கு வருகை தரும் கட்டாரின் மன்னர்!

பிரான்சுக்கு வருகை தரும் கட்டாரின் மன்னர்!

26 மாசி 2024 திங்கள் 17:50 | பார்வைகள் : 9762


இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனையில் பிரதான மஸ்தியஸ்தராக செயற்பட்டு வரும் கட்டாரின் மன்னன் ( l’émir du Qatar) Sheikh Tamim bin Hamad Al-Thani பிரான்சுக்கு வருகை தர உள்ளார்.

நாளை பெப்ரவரி 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை அவர் பரிசை வந்தடைவார். அவரை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்பார். இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையில் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறமை அறிந்ததே. காஸா பகுதியில் தொடர் தாக்குதல் மேற்கொண்டுவரும் இஸ்ரேலின் ஆக்ரோசமான போக்கை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாக இந்த விஜயம் அமைந்துள்ளதாக அறிய முடிகிறது.

மன்னர் Sheikh Tamim bin Hamad Al-Thani 43 வயதுடைய 13 பிள்ளைகளின் தந்தையாவார். உலகில் உள்ள செல்வந்த அரசாங்கங்களில் அவர் ஆறாவது இடத்தில் உள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்