உக்ரேனுக்கு இராணுவம் அனுப்புகிறதா மேற்குலகம்..?? - எதுவும் தவிர்க்க முடியாதது என்கிறார் ஜனாதிபதி மக்ரோன்!
27 மாசி 2024 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 5150
உக்ரேனுக்கு மேற்குலக நாடுகளின் இராணுவப்படையை அனுப்புவதற்குரிய தயார்ப்படுத்தல் இட்ம்பெற்று வருவதாக பல செய்திகள் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் விளக்கமளித்துள்ளார்.
”உக்ரேனுக்கு ஆதரவாக இராணுவ துருப்புகளை அனுப்புவதற்குரிய எந்த உத்தியோகபூர்வ அங்கீகரிக்கப்பட்ட ஒருமித்த கருத்துக்கள் இதுவரை இல்லை. ஆனால், எதுவும் தவிர்க்க முடியாதது. இந்த யுத்தத்தில் இரஷ்யா வெற்றிபெறாமல் இருக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்!” என இம்மானுவல் மக்ரோன் நேற்று பெப்ரவரி 26 ஆம் திகதி திங்கட்கிழமை குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், உக்ரேனுக்கு ஆதரவான நாடுகள் இரஷ்ய மக்களுடன் போரில் ஈடுபடவில்லை. ஆனால் உக்ரேனில் இரஷ்யா தங்களது வெற்றியை பதிவு செய்ய விரும்பவில்லை என தெளிவுபடுத்தினார்.