Paristamil Navigation Paristamil advert login

கல்கிஸை - காங்கேசன்துறை 'யாழ் நிலா' ரயில் சேவை ஆரம்பம்

கல்கிஸை - காங்கேசன்துறை 'யாழ் நிலா' ரயில் சேவை ஆரம்பம்

5 ஆவணி 2023 சனி 11:29 | பார்வைகள் : 5283


கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறை வரையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் நிலா எனும் பெயரில் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

பிரதி சனிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன், பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸைநோக்கி இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒருவழிப் பயணத்துக்கான முதலாம் வகுப்புக் கட்டணமாக 4,000 ரூபாய் அறவிடப்படுகிறது.

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் நாளாந்தம் இந்த ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்