Paristamil Navigation Paristamil advert login

Ranji Trophy 2024- 7 ஆண்டுகளுக்குப் பின் அரையிறுதிக்குள் நுழைந்த தமிழ்நாடு

Ranji Trophy 2024- 7 ஆண்டுகளுக்குப் பின் அரையிறுதிக்குள் நுழைந்த தமிழ்நாடு

27 மாசி 2024 செவ்வாய் 08:37 | பார்வைகள் : 1451


உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்க ரஞ்சி கோப்பையின் காலிறுதியில் நடப்பு சாம்பியனான சவுராஷ்டிராவுக்கு தமிழ்நாடு அதிர்ச்சி அளித்தது.

ரஞ்சி டிராபி 2024 கால் இறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிராவை இன்னிங்ஸ் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது தமிழ்நாடு.

கேப்டன் சாய் கிஷோரின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் தமிழ்நாடு ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி அரையிறுதிக்குள் நுழைந்தது.

2016-17க்கு பிறகு அந்த அணி அரையிறுதிக்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 183 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளையும், அஜித் ராம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தமிழக அணி முதல் இன்னிங்சில் 338 ஓட்டங்கள் குவித்தது. சாய் கிஷோர் (60), இந்திரஜித் (80), பூபதி குமார் (65) சிறப்பாக செயல்பட்டனர்.  

இரண்டாவது இன்னிங்சிலும் சவுராஷ்டிரா மீண்டும் கை ஓங்கியது. 

அந்த அணி 122 ஓட்டங்களுக்குச் சரிந்தது.

சத்தேஷ்வர் புஜாரா மட்டும் அதிகபட்சமாக 46 ஓட்டங்கள் எடுத்தார். 

சவுராஷ்டிரா அணியின் இரண்டாவது இன்னிங்சில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மறுபுறம், ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் இடையேயான மற்றொரு காலிறுதியில் ஆந்திரா அணி அரையிறுதியை நெருங்கியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்