ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அதிரடி நடவடிக்கைகள்
27 மாசி 2024 செவ்வாய் 09:33 | பார்வைகள் : 12769
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியதில் இருந்து தலிபான்கள் அங்கு ஆட்சியை கைப்பற்றினர்.
இவ்வாறான நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொலை செய்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்து ஆப்கானிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, குடும்பத்தினர் முன்னிலையில் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு பொது வெளியில் மரண தண்டனை விதித்து தலிபான்கள் அரசு அதிரவைத்து இருக்கிறது.
மைதானம் ஒன்றில் ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையானது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜவ்ஸ்ஜான் மாகாணத்தில்தான் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

























Bons Plans
Annuaire
Scan