€36.5 மில்லியன் யூரோக்கள் மோசடி! - ஆறு பேர் கைது!

27 மாசி 2024 செவ்வாய் 09:36 | பார்வைகள் : 13412
போலியான விளம்பரங்களை மேற்கொண்டு பணமோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மொத்தமாக €36.5 மில்லியன் யூரோக்கள் பணத்தினை மோசடி செய்துள்ளனர்.
பல்வேறு ஊடகங்களில் போலியான விளம்பரங்களை வெளியிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இரு சகோதரர்கள் தலைமையாக செயற்பட்டு திட்டமிட்டு இந்த மோசடியை மேற்கொண்டுள்ளனர். Perreux-sur-Marne, Bry-sur-Marne (Val-de-Marne) நகரங்களை தலைமையாக கொண்டு அவர்கள் இயங்கிவந்துள்ளனர்.
அவர்கள் காணி நிலம் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தியதாகவும், அதன் மூலமாக பணத்தினை மோசடி செய்ததாகவும், கடந்த பல ஆண்டுகளில் அவர்கள் மேற்படி பணத்தொகையை மோசடி செய்ததாகவும், பல ஆயிரம் மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரு சகோதர்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 140 - Grands Crus Classés மதுபான போத்தல்கள், 33 ஆடம்பர கைக்கடிகாரம், விலையுயர்ந்த ஆடைகள், 110,000 யூரோக்கள் ரொக்கப்பணம், பல மகிழுந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர்கள் மீது பண மோசடி, ஏமாற்று உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1