இனி என்னை அப்பா என்று யார் அழைப்பார்கள்..? மனைவி தாய் பிள்ளைகள் உட்பட 103 உறவுகளை இழந்த தந்தை கண்ணீர்
27 மாசி 2024 செவ்வாய் 10:22 | பார்வைகள் : 2022
தனது குடும்பத்தை முற்றாக அழித்த குண்டிலிருந்து அஹமட் அல் குபேரி மாத்திரம் உயிர்தப்பினார்.
காசாவில் உள்ள அவரது வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுதாக்குதலில் 103 உறவினர்கள் கொல்லப்பட்டவேளை அவர் தனது வீட்டிலிருந்து மேற்குகரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரிக்கோவில் சிக்குண்டிருந்தார்.
டெல்அவியில் கட்டுமானபணியில் அவர் வேலைசெய்துகொண்டிருந்தவேளை இஸ்ரேலின் அந்த தாக்குதல் இடம்பெற்றது
அந்த நாட்களி;ல்இஸ்ரேலின் முற்றுகையினால் அவர் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் பார்ப்பதற்கு திரும்பமுடியாத நிலை காணப்பட்டது.
தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளக்கூடிய நிலைகாணப்பட்டவேளை அவர் அவர்களுடன் பேசினார் தாக்குதல் இடம்பெற்ற டிசம்பர் 8ம் திகதியும் அவர் தனது மனைவி சிறீனுடன் பேசினார்.
அவளுக்கு தான் மரணிக்ககூடும் என்பது தெரிந்திருந்தது தான் ஏதாவது தவறுசெய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என அவள் தொலைபேசியில் தெரிவித்தால் நான் அப்படி தெரிவிக்கவேண்டியதில்லை என்றேன் அதுவே எங்கள் இடையே இடம்பெற்ற இறுதி உரையாடல் என அவர் தெரிவிக்கின்றார்.
அவரது உறவினரின் வீட்டை தாக்கிய குண்டினால் அவரின் மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.
அந்த குண்டுவீச்சினால் அஹமட்டின் தாயாரும் அவரது நான்கு சகோதரர்கள் அவர்களின் குடும்பத்தவர்கள் உறவினர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
இரண்டுமாதங்கள் கடந்துள்ள போதிலும் அவர்களின் பலரின் உடல்கள் இன்னமும் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளன.
உயிருடன் இருந்திருந்தால் கடந்தமாதம் அவரது இளைய மகளிற்கு இரண்டுவயது.
இந்த இழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அவை ஏற்படுத்தும் துயரத்திலிருந்து சிறிதளவும் விடுபடமுடியாத நிலையில் அஹமத் காணப்படுகின்றார்.
தனது பிள்ளைகளின் உடல்களை பெற்றுக்கொள்ள முடியாதவராக அவற்றினை அடக்கம் செய்ய முடியாதவராக காணப்படும் அஹமட் இன்னமும் அது குறித்து நிகழ்காலத்திலேயே பேசுகின்றார்.
எனது பெண்பிள்ளைகள் எனக்கு சிறிய பறவை போன்றவர்கள் நான் கனவில் இருப்பது போல உணர்கின்றேன் அவர்களிற்கு என்ன நடந்தது என்பதை என்னால் இன்னமும் நினைத்து பார்க்க முடியாமலுள்ளது என்கின்றார் அவர் .
அவர்களின் நினைவுகள் மீண்டும் மீண்டும் தாக்குவதை தவிர்ப்பதற்காக அவர் அவர்களின் படங்களை தனது கையடக்க தொலைபேசியிலிருந்து அகற்றிவிட்டார்.
உயிர்தப்பிய உறவினர்கள் அயலவர்களின் தகவல்களை அடிப்படையாக வைத்தே அவர் அவர்களிற்கு என்ன நடந்தது என்பதைஅறிந்துகொண்டுள்ளார்.
வீட்டின் வாயிலை முதலில் ஏவுகணையொன்று தாக்கியது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி உறவினரின் வீட்டில் தஞ்சமடைந்தனர், 15 நிமிடத்தின் பின்னர் விமானமொன்று அந்த வீட்டை தாக்கியது என உயிர்தப்பிய அயலவர்களும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
தாக்கப்பட்ட அந்த நான்குமாடி வீடு காசாவின் ஜெய்டுனின் சகாபா மருத்துவநிலையத்திற்கு அருகில் காணப்பட்டது.

அது தற்போது சிதைந்த கொன்கிறீட் மேடாக காணப்படுகின்றது இடிபாடுகளிற்குள் பிரகாசமான வண்ணபுள்ளிகள் தென்படுகின்றன பச்சை பிளாஸ்டிக் கப்களும் ஆடைகளும் காணப்படுகின்றன.
ஒரு நொருங்கிய காரின் வெள்ளி சட்டகம் காணப்படுகின்றது அது கொங்கிறீட் பாறைகளின் மேல் காணப்படுகின்றது.
தாக்குதல்கள் ஆரம்பித்ததும் உயர்வான மலைப்பகுதிகளை நோக்கி தப்பிச்சென்றவர்கள் உயிர்தப்பினார்கள் வீட்டில் தஞ்சமடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என உயிர்தப்பிய அஹமட்டின் உறவினர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அதுநெருப்புமண்டலமாக காணப்பட்டது எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த நான்கு வீடுகள் தாக்கப்பட்டன பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அவர்கள் வீடுகளை தாக்கினார்கள் என அவர் தெரிவித்தார்.
குபேரியின் குடும்பத்தை சேர்ந்த 110 பேர் அந்த வீட்டிலிருந்தனர் அவர்களில் ஒரு சிலரே உயிர்தப்பினார்கள் என அவர் தெரிவித்தார்.
விமானதாக்குதல்களை தொடர்ந்து இரண்டு பெரும் வெடிப்புசத்தங்களை கேட்டதாக அஹமட் என்ற உறவினர் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை எதுவுமில்லை சிலர் அந்த பகுதியிலிருந்து முன்கூட்டியே வெளியேறாவிட்டால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் அந்த இடம் தற்போதும் முற்றிலும் மாறுபட்டதாக காணப்படுகின்றது அங்கு ஒரு வாகனதரிப்பிடமும் நீரை சேகரிப்பதற்கு ஒரு இடமும் ஒரு பெரிய வீடு உட்பட நான்கு வீடுகளும் காணப்பட்டன அந்த குண்டுவெடிப்பு அந்த பகுதியை முற்றாக துடைத்தெறிந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளிற்குள் இருந்து உயிர்தப்பியவர்களை மீட்பதற்காக இரவிரவாக முயற்சிகள் இடம்பெற்றன ஹமீட் தெரிவித்தார்.
இரவிரவாக அந்த பகுதியின் மேலாக விமானங்கள் வட்டமிட்டவண்ணமிருந்தன நாங்கள் சிலரை காப்பாற்ற முயன்றவேளை ஹெலிக்கொப்டர்கள் எங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தன எனவும் அவர் தெரிவித்தார்.
நாங்கள் அந்த வீட்டில் அமர்ந்திருந்தோம் பின்னர் நாங்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டோம்நான் ஒரு பக்கத்திலிருந்து மற்றைய பக்கத்திற்கு தூக்கி எறியப்பட்டேன் என்னை அவர்கள் எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பது தெரியாது நான் மரணத்தை கண்முன்னே பார்த்தேன் என அவர் தெரிவித்தார்.
இரண்டரை மாதங்களிற்கு பின்னரும் அவர்கள் அந்த உடல்களை மீட்க முயல்கின்றனர் இடிபாடுகளை அகற்றுவதற்கான இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக அவர்கள் நிதி திரட்டியுள்ளனர்.
எனது சகோதரரின் மனைவியின் உடல் உட்பட நான்கு உடல்களை மீட்டோம் அவர்களின் உடல்கள் 75 நாட்களுக்கு மேல் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்தன என அஹமட் தெரிவித்தார்.
அவர்களின் தற்காலிக புதைகுழிகள் அருகில் உள்ள வெற்றுக்காணியில் காணப்படுகின்றன .
ஜெரிக்கோவில் சிக்குண்ட அஹமட் அவர்களை பார்க்க செல்லவில்லை.
எனது தாயார் மனைவி குழந்தைகளை பறிகொடுப்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன் என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
விமானக்குண்டுவீச்சினால் அந்த குடும்பம் அழிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேலிய படையினரிடம் நாங்கள் கேள்வி எழுப்பினோம்,அதற்கு இந்த தாக்குதல் குறித்து எதுவும் தெரியாது என குறிப்பிட்ட இஸ்ரேலிய இராணுவபேச்சாளர் ஹமாசுடனான யுத்தத்தின் போது பொதுமக்களிற்கு பாதிப்பு ஏற்படுவதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜெரிகோவிலிருந்தபடி அஹமட் சில நேரங்களில் காசாவில் உயிர் தப்பியுள்ள தனது உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்கின்றார்.
எனினும் தனது நேசத்திற்குரிய பகுதியிலிருந்து பல மாதங்கள் வெளியே வசித்துள்ள அவர் மீண்டும் திரும்பி செல்வது நிச்சயமில்லை என்கின்றார்.
எனது கனவுகள் காசாவில் சிதைக்கப்பட்டன,யாருக்காக நான் திரும்பி போகவேண்டும் யார் என்னை அப்பா என கூப்பிடுவார் யார் என்னை டார்லிங் என கூப்பிடுவார் நானே தனது வாழ்க்கை எனது மனைவி கூப்பிடுவார் இனி யார் அப்படி சொல்வார்கள் என்கின்றார் அவர்.
நன்றி வீரகேசரி