Paristamil Navigation Paristamil advert login

வேற லெவல் லேப்டாப் கான்செப்ட் அறிமுகப்படுத்திய லெனோவோ

வேற லெவல் லேப்டாப் கான்செப்ட் அறிமுகப்படுத்திய லெனோவோ

27 மாசி 2024 செவ்வாய் 11:58 | பார்வைகள் : 2315


லெனோவோ நிறுவனம் தனது புதிய தின்க்பேட் லேப்டாப் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய கான்செப்ட் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சம் அதில் உள்ள டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே (Transparent Display) ஆகும். இத்தகைய வசதியுடன் அறிமுகமாகி இருக்கும் முதல் லேப்டாப் இது என்ற பெருமையை புதிய லெனோவோ தின்க்பேட் பெற்று இருக்கிறது.

புதிய தின்க்பேட் கான்செப்ட்-இல் 17.3 இன்ச் அளவில் மைக்ரோ எல்.இ.டி. டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே பார்டர்லெஸ் டிசைன் மற்றும் கண்ணாடி போன்று அதன் பின்புறம் இருப்பவற்றை பார்க்க செய்கிறது. இத்துடன் டிரான்ஸ்பேரன்ட் கீபோர்டு பகுதி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதில் மைக்ரோ எல்.இ.டி. தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. இதனால் நிறங்கள் உண்மைக்கு நிகராகவும், அதிகளவு அடர்த்தியாகவும் பிரதிபலிக்கிறது. இந்த டிஸ்ப்ளே 1000 நிட் பிரைட்னஸ் கொண்டிருப்பதால், நேரடி சூரிய வெளிச்சத்திலும் காட்சிகளை சீராக பார்க்க செய்கிறது.

டெக் வொர்ல்டு 2023 நிகழ்வை ஒட்டி, லெனோவோ மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் அடாப்டிவ் டிஸ்ப்ளே கான்செப்ட்-ஐ காட்சிப்படுத்தின. இந்த கான்செப்ட்-ஐ பயனர் தேவைகளுக்கு ஏற்ப பல வடிவங்களில் மடித்துக் கொள்ளலாம். 

புதிய தின்க்புக் டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே லேப்டாப் கான்செப்ட் எப்போது உற்பத்தி நிலையை அடையும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்