பேத்தியின் இயக்கத்தில் நடித்த பாரதிராஜா...
27 மாசி 2024 செவ்வாய் 12:39 | பார்வைகள் : 9691
இயக்குனர் சிகரம் பாரதிராஜா மற்றும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா ஆகிய இருவரும் இயக்குனர்கள் என்ற நிலையில் தற்போது பாரதிராஜாவின் பேத்தி மதிவதனி என்பவர் தான் படிக்கும் பள்ளிக்காக ஒரு குறும்படம் இயக்கிய நிலையில் பாரதிராஜா அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா என்பதும் கிராமத்து மண்வாசனை மிக்க படங்களை இயக்கியுள்ள அவர் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார் என்பதும் தெரிந்தது.
அதேபோல் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஒரு சில படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் வெளியான ’மார்கழி திங்கள்’ என்ற படத்தை இயக்கினார் என்பதும் இந்த படத்தில் பாரதிராஜா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் மகளான மதிவதனி என்பவரும் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். பாரதிராஜா குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை இயக்குனரான மதிவதனி தான் படிக்கும் பள்ளிக்காக ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தில் பாரதிராஜா நடித்துள்ள நிலையில் சிறுவயதிலேயே அவரது அசாத்திய திறமையை பார்த்து அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பாரதிராஜா தன்னுடைய இயக்கத்திலேயே சில படங்கள் நடித்துள்ள நிலையில், தனது மகன் இயக்கிய ’மார்கழி திங்கள்’ படத்திலும், தனது பேத்தி இயக்கிய குறும்படத்திலும் நடித்துள்ளதால் 3 தலைமுறை குடும்பத்தினர் படத்தில் நடித்தவர் என்ற பெருமையையும் பாரதிராஜா பெற்றுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan