சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் சமந்தா?

27 மாசி 2024 செவ்வாய் 13:55 | பார்வைகள் : 7688
மலையாள சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மம்முட்டியுடன் எடுத்தப் புகைப்படத்தை நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். இதனால், அவருடன் ஜோடி சேர்ந்து சமந்தா நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
நடிப்புக்காக மட்டுமல்லாது தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான சூழ்நிலைகளை நம்பிக்கையோடு எதிர்கொண்டதற்காக நடிகை சமந்தா ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமானவர். நேற்றோடு சமந்தா திரைத்துறைக்கு அறிமுகமாகி 14 வருடங்கள் ஆகிவிட்டது. இதற்காக திரைத்துறையினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துச் செய்திகளைக் கூறி வருகின்றனர்.
மையோசிடிஸ் நோய்க்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளவர் விரைவில் சினிமாவில் நடிக்கத் தொடங்குகிறேன் எனவும் கூறினார். இதற்கிடையில் விளம்பரங்கள், தன்னுடைய துணி பிசினஸ் என இதிலும் பிஸியாக இருந்தார். தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.
மேலும், ‘டேக் 20’ என உடல்நலன் சார்ந்த விஷயங்களையும் யூடியூப் ஒன்று தொடங்கி பாட்காஸ்ட்டாக பதிவிட்டு வருகிறார் சமந்தா. இந்த நிலையில், விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கொச்சி சென்றுள்ள அவர் மலையாள நடிகர் மம்முட்டியை சந்தித்து இருக்கிறார். அவருடன் இணைந்து விளம்பர படத்தில் நடிப்பது குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர் தனக்குப் பிடித்த நடிகர் என்றும் அவரைக் குறிப்பிட்டுள்ளார். விளம்பரத்தில் இணைந்து நடித்தது போலவே, விரைவில் வெள்ளித்திரையிலும் மம்முட்டியுடன் ஜோடி சேர ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025