Paristamil Navigation Paristamil advert login

39 எம்.பி.,க்களை பார்லி.,க்கு அனுப்பும்வரை நமக்கு ஓய்வு இல்லை: அண்ணாமலை பேச்சு

39 எம்.பி.,க்களை பார்லி.,க்கு அனுப்பும்வரை நமக்கு ஓய்வு இல்லை: அண்ணாமலை பேச்சு

27 மாசி 2024 செவ்வாய் 15:34 | பார்வைகள் : 2838


இது யாத்திரை நிறைவு விழாவே தவிர, 39 எம்.பி.,க்களை பார்லிமென்ட்க்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு இல்லை என பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை மேற்கொண்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இன்று (பிப்.,27) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் யாத்திரையை முடித்தார். இதற்கான நிறைவு விழாவில் பிரதமர் மோடி, மத்திய இணையமைச்சர் எல்முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். விழாவின் துவக்கத்தில் பிரதமர் மோடிக்கு ஜல்லிக்கட்டு நினைவு பரிசும், 65 கிலோ எடையுள்ள ஈரோடு மஞ்சள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டது.

விழாவில் அண்ணாமலை பேசியதாவது: இன்னும் 60 நாட்களில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்க உள்ளார். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்று சரித்திரம் படைக்கும். இன்று யாத்திரை நிறைவு விழாவே தவிர, 39 எம்.பி.,க்களை பார்லிமென்ட்க்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு இல்லை.</p>


காங்கிரஸ் தடை செய்த ஜல்லிக்கட்டு, இன்றைக்கு நடைபெறுவதற்கு ஒரே காரணம் பிரதமர் மோடி மட்டுமே. அதன் காரணமாக ஜல்லிக்கட்டு நினைவுப்பரிசும், பாரம்பரியமிக்க மஞ்சளும் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டன. 2014, 2019ல் செய்த தவறை தமிழக மக்கள் இந்த முறை செய்ய மாட்டார்கள். பொய் பிரசாரங்களை ஏற்காமல், பிரதமர் மோடியை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். பல்லடம் கூட்டம் தமிழக பாஜ.,விற்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்