Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் போரில் புதிய திருப்பம் - பின்வாங்கும் ராணுவத்தினர்

உக்ரைன் போரில் புதிய திருப்பம் - பின்வாங்கும் ராணுவத்தினர்

28 மாசி 2024 புதன் 08:39 | பார்வைகள் : 4968


உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில், மேலும் உக்ரைன் படைகள் இரண்டு கிராமங்களில் இருந்து பின்வாங்கியுள்ளன.

அவிடிய்கா(Avdiivka) பகுதியை அண்டிய கிராமங்களான சீவர்னே(Sievierne) மற்றும் ஸ்டெபோவ்(Stepove) ஆகிய இரண்டிலிருந்தும் உக்ரைன் படைகள் தங்கள் பின்வாங்கலை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த பின்வாங்கல், கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர தாக்குதல்களுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது.

இந்த பின்வாங்கல், ரஷ்ய படைகள் மேற்கு நோக்கி முன்னேறுவதைத் தடுக்கும் நோக்கில், ஓர்லிவ்கா(Orlivka) - டொனென்கி(Tonenke) - பேர்ட்ய்சி(Berdychi) கோட்டைப்பகுதியில் வலுவான பாதுகாப்பு நிலைகளை உருவாக்குவதற்கான தந்திரோபாய முடிவாகும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் டிமிட்ரோ லிகோவிய்(Dmytro Lykhoviy) விளக்கினார்.

இந்த பின்வாங்கலுக்கான முடிவு, அதே பகுதியில் உள்ள லஸ்டோச்ச்கினே(Lastochkyne) கிராமத்தை சமீபத்தில் இழந்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது.

அவிடிய்கா(Avdiivka) மற்றும் மரிங்கா(Marinka) அருகே கடுமையான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைன் படைகள் அப்பகுதியில் முன்னேற்றி வரும் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி வருகின்றன.

போர் மூன்றாவது ஆண்டில் நுழையும் நிலையில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் தொடர்ச்சியான ராணுவ ஆதரவு அவசியம் என்பதை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்